தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சித்து எங்கு தப்பியோடினார்? - மீனாட்சி லேகி கேள்வி - மீனாட்சி லேகி

டெல்லி: பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாரா மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் மூத்தத் தலைவர் சித்து எங்கு ஓடி ஒளிந்துள்ளார் என பாஜகவின் மீனாட்சி லேகி கேள்வி எழுப்பியுள்ளார்.

Meenakshi Lekhi taunts Sidhu over attack on Nankana Sahib
Meenakshi Lekhi taunts Sidhu over attack on Nankana Sahib

By

Published : Jan 5, 2020, 8:29 AM IST

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மீனாட்சி லேகி டெல்லியில் சனிக்கிழமை (ஜன4) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “பாகிஸ்தானிலுள்ள சீக்கிய குருத்வாரா மீதான தாக்குதலுக்குக் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போதுவரை இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் பேசியதாக நான் அறியவில்லை. சித்து எங்கு தப்பியோடினார் என்பது குறித்தும் தெரியவில்லை. இதற்கு அப்புறமும், பாகிஸ்தானின் ஐ.எஸ். தலைவரை அவர் கட்டிப்பிடிக்க விரும்பினால், காங்கிரஸ் அவரை பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

சீக்கிய மத நிறுவனர் குருநானக் தேவ் பிறந்த இடத்தில் குருத்வாரா நங்கனா சாஹிப் கட்டப்பட்டது. இந்த குருத்வாரா மீது தாக்குதல் நடந்துள்ளது.

இதையும் படிங்க: மும்பையில், சிவசேனா ஆதரவாளர் மீது துப்பாக்கிச் சூடு

ABOUT THE AUTHOR

...view details