புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக மருத்துவ வல்லுநர்கள், ஜிப்மர் மருத்துவர்களுடன் இணைந்து கரோனா பற்றி ஆராய்ந்து அரசுக்கு உடனுக்குடன் ஆலோசனை வழங்கி வருகின்றனர். அதன்படி, தொற்று பரவாமல் தடுப்பது குறித்த இந்திய மருத்துவக் கழக குழுவின் ஆலோசனை கூட்டம், ஆளுநர் மாளிகையில் நேற்றிரவு நடைபெற்றது.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக மருத்துவர்கள் பல்வேறு ஆலோசனைகளை அரசுக்கு வழங்கினர். அதில், ” புதுச்சேரியில் இரு வாரத்துக்கு ஒருமுறை தனியார் கிளினிக் வைத்திருக்கும் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். பரிசோதனைகளை அதிகரிப்பதற்கான வழிகள், அதற்கான பரிந்துரைகள் குறித்து அவர்களிடம் விவாதிக்க வேண்டும். அந்தந்தப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்களுடனும் இணைந்து, போலி மருத்துவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.