பிகார் மாநிலம் முசாஃபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் கடந்த வாரம் எலும்புக் கூடுகளின் பாகம் கண்டெடுக்கப்பட்டது. அது தொடர்பாக மருத்துமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் சாஹி கூறியதாவது, எஸ்கேஎம்சி மருத்துமனையின் உடற்கூறாய்வு கிடங்கு தலைமை மருத்துவரிகன் கண்காணிப்பில் உள்ளது என்றார். எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக மருத்துவர்களிடம் விசாரணை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
எலும்புக்கூடு விவகாரம்: ஊடகம் பெரிதுபடுத்துகிறது! - எஸ்கேஎம்சி மருத்துமனை
பாட்னா: பிகார் மாநிலத்தில் எஸ்கேஎம்சி மருத்துமனை வளாகத்திற்குள் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டதை, ஊடகம் பெரிதுபடுத்துகிறது என்று பிகார் அமைச்சர் அசோக் சௌத்ரி கூறியுள்ளார்.
ashok choudhary
இந்நிலையில் எஸ்கேஎம்சி மருத்துமனை வளாகத்திற்குள் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு தொடர்பாக பிகார் அமைச்சர் அசோக் சௌத்ரி கூறியதாவது, எலும்புக்கூடு மருத்துவமனைக்குள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர், அலுவலர்கள் உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும், இவ்விவகாரத்தை ஊடகம் பெரிதுபடுத்துகிறது,அதுமட்டுமல்லாமல் இதனை ஊடகம் வேறு கோணத்தில் கொண்டுசெல்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.