நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் சர்தார் சரோவர் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவுள்ளதாக குஜராத் மாநில அரசு முடிவு செய்தது. அரசின் இந்த முடிவை கண்டித்து அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக்கூடாது என்று சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால் சுற்றியிருக்கும் கிராமங்களுக்கு பேராபத்து விளையும் என்று காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார்.
'நர்மதாவை பாதுகாப்போம்' - முடிவுக்கு வந்தது மேதா பட்கரின் உண்ணாவிரதம்..! - sardhar sarovar dam
போபால்: சர்தார் சரோவர் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் குஜராத் அரசின் முடிவை கண்டித்து, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர், உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

Medha Patkar
இந்நிலையில் மேதா பட்கரின் உடல்நிலை மோசமானதை அடுத்து, பல்வேறு தரப்பினரும் போராட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, மேதா பட்கர் பழச்சாறு அருந்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.