சம்மக்கா சாரலம்மா ஜாத்ரா அல்லது மேடாரம் ஜாத்ரா என்பது தெலங்கானாவின் கும்பமேளாவாகும். உத்திரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடைபெறும் கும்பமேளாவிற்கு அடுத்தப்படியாக இந்த பண்டிகைக்கு அதிக மக்கள் வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம் வாரங்கல் அருகில் முலுகு மாவட்டத்தில் உள்ள தாட்வாய் காட்டுப்பகுதியில் உள்ளது இந்த கோயில். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நான்கு நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவானது நேற்று (பிப்ரவரி 5ஆம் தேதி) தொடங்கி மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது.