தேர்தல் நடத்தை விதிகளை மீறி பரப்புரை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மீது எதிர்கட்சிகள் சார்பில் பலமுறை தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டன.
மோடி, அமித் ஷாவுக்கு எதிரான வழக்கு : தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் - Congress
டெல்லி: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புகாரின் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் எம்பியும், மகிளா காங்கிரஸ் தலைவருமான சுஷ்மிதா தேவ், உச்ச நீதிமன்றத்தில் மோடி, அமித் ஷாவுக்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரன்ஜன் கோகோய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு தடையில்லை எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், வழக்கு விசாரணையை மே 2 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.