மத்திய பிரதேம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுபி ஜெயின். இவர் இந்தூரில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்பிஏ படித்து வருகிறார். அதோடு போக்குவரத்தையும் சரி செய்து வருகிறார்.
அதன்படி சிக்னலில் நின்று போக்குவரத்தை சரி செய்வதோடு மட்டுமல்லாமல், போக்குவரத்து விதிகளை மதிக்க வலியுறுத்தி விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். மேலும் வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் அணியவும், சீட் பெல்ட் அணியவும், போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்ற விழிப்புணர்வு மேற்கொள்கிறார்.