குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து, தங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்க இருப்பதாக லக்னோ பல்கலைக்கழகம் அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான மாயாவதி தனது எதிர்பை பதிவுசெய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சிஏஏ குறித்த விவாதத்தை ஏற்றுக்கொள்ளலாம். இருப்பினும் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் ஒன்றை கல்லூரி பாடத்திட்டத்தில் இணைப்பது தவறு. பகுஜன் சமாஜ் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது, இப்பாடம் கண்டிப்பாக நீக்கப்படும்.