உத்தரப் பிரதேச மாவட்டம் லோனியில் பெண் ஒருவரை குழந்தை திருடுவதற்கு வந்ததாக எண்ணி அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. விசாரித்து பார்த்ததில் அந்த பெண் தன் பேரனுடன் ஷாப்பிங் செய்யவந்தது தெரியவந்தது. இதேபோல் ஒரு சம்பவம் ஷும்லி பகுதியில் நடந்துள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் தவறான செய்திகள் பரப்பப்பட்டு கும்பல் வன்முறைகளும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
'கும்பல் வன்முறையை தடுக்க கடுமையான சட்டம் தேவை' - மாயாவதி - கும்பல் வன்முறை
லக்னோ: நாட்டில் நடக்கும் கும்பல் வன்முறைகளை தடுக்க கடுமையான சட்டம் தேவை என முன்னாள் உத்தரப் பிரதேச முதலமைச்சர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி தன் ட்விட்டர் பக்கத்தில், "உத்தரப் பிரதேசத்தில் கும்பல் வன்முறைகள் அதிகரித்துள்ளது. கும்பலால் அப்பாவி பெண் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். குழந்தைத் திருட்டில் பெண்கள் அதிகம் ஈடுபடுவதாக வதந்திகள் பரப்பப்படுவதை தொடர்ந்து, மக்களிடையே அச்ச உணர்வு அதிகரித்துள்ளது. இதனால், சந்தேகத்திற்கிடமான பெண்கள் மீது கும்பல் வன்முறைகள் நிகழ்த்தப்படுகின்றன. எனவே, கும்பல் வன்முறையை தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.