லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தை சேர்ந்த கோயில் பூசாரி நேற்று (அக்.11) அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார். நிலத் தகராறு தொடர்பாக கோயில் பூசாரி சுடப்பட்டுள்ளார் என்பது தெரியவருகிறது.
இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவித்து பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச அரசை கண்டித்து, அவர் இந்தியில் பதிவிட்ட ட்வீட் பதிவில், “ராஜஸ்தானை போன்று உத்தரப் பிரதேசத்திலும் நில மாபியாக்களின் அராஜகம் தொடர்கிறது.
சாமியாரால் ஆட்சி நடத்தப்படும் உத்தரப் பிரதேசத்தில் சாமியார்களுக்கு பாதுகாப்பில்லை. இது அவமானம்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.