கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இப்பெருந்தொற்றால் இதுவரை 35,043 பேர் பாதிப்படைந்துள்ளனர். தொற்று காரணமாக இதுவரை 1,147 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தொழிலாளர்கள், தினக் கூலிகள், புலம்பெயர் தொழிலாளர்கள் உணவின்றி தவித்துவருகின்றனர்.
இதனிடையே, தொழிலாளர்களை பாதுகாக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சர்வதேச தொழிலாளர் தினத்தை தொழிலாளர்களும் தொழிலாளர் வர்க்கமும் கொண்டாடிவருகின்றன. ஆனால், இம்முறை ஊரடங்கு விதிக்கப்பட்ட காரணத்தால் அவர்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது.
இம்மாதிரியான காலத்தில் பொதுநலனைக் கருத்தில்கொண்டு பார்த்தால் மத்திய, மாநில அரசுகளின் பங்குகள் முக்கியமாகப் பார்க்கப்படுகின்றன. ஊழியர்களின் ஊதிய குறைப்பில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க உ.பி. அரசு நடவடிக்கை!