நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றிப் பெற்று தனிப்பொரும்பான்மையுடன் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளது. இந்நிலையில், தேர்தல் முடிவு நாளான மே 23ஆம் தேதியை மோடி நாளாக கொண்டாட வேண்டும் என பிரபல யோகா ஆசிரியர் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
'மே 23ஆம் தேதியை மோடி நாளாக கொண்டாட வேண்டும்..!' - பாபா ராம்தேவ் - மோடி நாள்
டெல்லி: "பாஜக வெற்றி பெற்ற மே 23ஆம் தேதியை மோடி நாளாக கொண்டாட வேண்டும்" என்று, பிரபல யோகா ஆசிரியர் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
பலகோடி மக்களின் நம்பிக்கையை வென்று பிரதமர் மோடி குறித்து அவர் கூறுகையில், எதிர்கட்சிகளின் மெகா கூட்டணியை மோடி தனி ஆளாக எதிர்கொண்டார். மக்கள் தற்போது பாதுகாப்பான கைகளில் உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பாஜக அமோக வெற்றிபெற்ற தேர்தல் முடிவுநாளான 23ஆம் தேதியை, மோடி நாளாகவோ அல்லது மக்கள் நல நாளாகவோ கொண்டாட வேண்டும்" என்ரு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தியாவின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், மூன்றாவது குழந்தையின் வாக்குரிமையை பறிக்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்று நேற்று பாபா ராம்தேவ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.