தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் மூழ்கிய மதுரா! - கோலாகலம்

லக்னோ: மதுராவில் கிருஷ்ண ஜெயந்தி அமோகமாக கொண்டாடப்பட்டுவருகிறது. கண் கவரும் தோரண அலங்காரங்களால் பக்தர்கள் நிறைந்து மதுராவே கோலகலமாக காட்சியளிக்கிறது.

krishna jayanthi

By

Published : Aug 24, 2019, 8:44 PM IST

கிருஷ்ண ஜெயந்தி வட மாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும். குறிப்பாக, உத்தரப் பிரதேச மாநிலம் மதுராதான் கிருஷ்ணர் பிறந்த இடம் என நம்பப்படுவதால் அங்கு இந்த விழா வெகு விமரிசையாககொண்டாடப்படும். மதுராவில் கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தியை காணவே பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருவர்.

வருடந்தோறும் நடைபெறும் கிருஷ்ண ஜெயந்தியைவிட இந்த வருடம் மதுராவில் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கண்களை கவரும் வண்ணத் தோரணங்களால், பக்தர்கள் நிறைந்த கூட்டத்தினால் மதுராவே கோலாகலம் பூண்டிருக்கிறது.

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் மூழ்கிய மதுரா!

இதையடுத்து கிருஷ்ணரை அலங்கரிக்கவே பிரேத்யகமாக மும்பையில் இருந்து ஆடைகள் தயாரிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details