கோவிட்-19 தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. இந்தியாவில் இதுவரை 11,439 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டால் இந்தியாவில் வைரஸ் பரவல் குறைவாகவே இருக்கிறது. இருப்பினும், இந்தியாவில் வைரஸ் தொற்று குறித்த சோதனைகள் போதியளவு நடைபெறுவதில்லை என்று பலரும் விமர்சித்துவருகின்றனர்.
இந்நிலையில் அதிகளவு சோதனைகளை நடத்துவதே கோவிட்-19 வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த ஒரே வழி என்று ராகுல் ட்வீட் செய்துள்ளார். இது குறித்து ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியா பரிசோதனை கருவிகளை வாங்குவதற்கு தாமதித்தது. இதனால் தற்போது அவற்றுக்குத் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன.