தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வாடிக்கையாளர்கள் இல்லாமல் வெறிச்சோடிய ஆக்ரா சந்தை!

டெல்லி: நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆக்ராவில் வணிக வளாகங்கள், முக்கிய வீதிகள் என எல்லாம் திறந்தபோதிலும் வாடிக்கையாளர்கள் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.

வாடிக்கையாளர்கள் இல்லாமல் வெறிச்சோடிய ஆக்ரா சந்தை
வாடிக்கையாளர்கள் இல்லாமல் வெறிச்சோடிய ஆக்ரா சந்தை

By

Published : Jun 9, 2020, 4:35 PM IST

கரோனா பரவல் காரணமாக, அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டு, கடைகள் திறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மத்திய அரசு அறிவித்த ஐந்தாம் கட்ட ஊரடங்கின்போது பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி துணிக் கடைகள், வணிக வளாகங்கள், முக்கிய வீதிகள் என எல்லாம் திறக்கப்பட்டுவிட்டன. கடைகள் அனைத்தும் திறந்திருந்த போதிலும் வாடிக்கையாளர்களின் வருகை போதுமான அளவு இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

கரோனா அச்சத்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வருவதை விரும்புவதில்லை. முடிந்த வரை, உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க மட்டும் வெளிய சென்று வருகின்றனர். இந்நிலையில் ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான், பிளிப்கார்ட் செயல்படத் தொடங்கியதால் தேவையான பொருட்களை மக்கள் ஆன்லைன் மூலமே வாங்கிக் கொள்கின்றனர்.

இந்நிலையில் கடைகள் அனைத்தும் வெறிச்சோடி கிடப்பதால், கடை முதலாளிகள் வருத்தத்துடன் உள்ளனர். ஆக்ராவில் கடைகள், உணவகங்கள் என 500க்கும் மேற்பட்ட கடைகள் திறந்திருந்த போதிலும் வாடிக்கையாளர்கள் வருவதில்லை எனத் தெரிய வருகிறது.

இதையும் படிங்க: NIL ஜிஎஸ்டி தாக்கல்செய்பவரா நீங்கள்? - அப்படின்னா இது உங்களுக்கான நற்செய்திதான்!

ABOUT THE AUTHOR

...view details