ஜார்க்கண்ட் மாநிலத்தின் லோஹர்டகா பகுதியில் உள்ள பகார் பாக்சைட் சுரங்கத்திலிருந்த வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. இதனை மாவோயிஸ்ட்டுகள் செய்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
சுரங்கத்தில் வாகனங்களை எரித்த மாவோயிஸ்ட்டுகள்! - மாவோயிஸ்ட்டுகள்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் செயல்பட்டு வரும் பகார் பாக்சைட் சுரங்கத்தில் வாகனங்களை மாவோயிஸ்ட்டுகள் தீயிட்டுக் கொளுத்தியதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
maoists-attack-lohardaga-bauxite-mines-set-vehicles-on-fire
இதுகுறித்து காவல் துறையினர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது சிபிஐ மாவோயிஸ்ட்டுகள் தான் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்துக்குப் பின்னால் இப்பகுதிகளில் தீவிரமாக இயங்கிவரும் மாவோயிஸ்ட்டு தலைவர் ரவீந்திர கன்ஜு இருப்பதாகச் சந்தேகிக்கிறோம்'' எனத் தெரிவித்தனர்.
மேலும் இச்சம்பவத்தில் பாலாஜி மற்றும் பிகேபி நிறுவனங்களைச் சேர்ந்த 11 வாகனங்கள் எரிக்கப்பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.