தமிழ்நாடு

tamil nadu

'நான் பலரை கொன்றுள்ளேன், மன்னித்து விடுங்கள்'- மாவோயிஸ்ட் தளபதி உருக்கம்

By

Published : Feb 29, 2020, 2:39 AM IST

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மாவோயிஸ்ட் ஒருவர் ஏ.கே. 47 ரக துப்பாக்கியுடன் சரணடைந்தார். ஆயுதப் போராட்டத்தின்போது பலரை கொன்றுள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தினர் தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Maoist commander surrenders with AK-47 in Maharashtra
மாவோயிஸ்ட் மூத்தத் தளபதி மகாராஷ்டிராவில் சரணடைந்தார்!

கோல்கா மாவோயிஸ்ட் இயக்கத்தின் ‘பிரதேசக் குழுவின்’ மூத்த உறுப்பினராக இருந்த விலாஸ் என்றழைக்கப்பட்ட தாஸ்ரு கோல்காவின் தலைக்கு ரூ.9.50 லட்சம் ரூபாய் வெகுமதியாக காவல்துறையினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.

அவர் மீது அம்மாவட்டத்தில் 149 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அவர் சரணடைந்தார்.

மாவோயிஸ்ட் விலாஸ் என்ற தாஸ்ரு கோல்கா

இது குறித்து ஈடிவி பாரத்திடம் தெரிவிக்கையில், “ஆயுத வழிப்போராட்டத்தின் மீதான நம்பிக்கையை இழந்ததால், காவல்துறையினரிடம் சரணடைகிறேன்.

மாவோயிஸ்ட் இயக்கத்தின் உறுப்பினராக பல ஆண்டுகள் வேலை செய்தவன். ஆயுதப்போராட்டத்தில் நான் பலரைக் கொன்றிருக்கிறேன். என்னால் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்” என்றார்.

கடந்த ஒரு ஆண்டில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த 35 உறுப்பினர்கள் கட்சிரோலி காவல்துறை முன் சரணடைந்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க : 'ராஜதானி விரைவு ரயிலில் 5 வெடிகுண்டுகள்' - ட்வீட் செய்த பயணியால் ரயில் நிறுத்தம்

ABOUT THE AUTHOR

...view details