தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களின் தயாரிப்பு அதிகரிப்பு - சுகாதாரத்துறை அமைச்சகம் - மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களின் தயாரிப்பு அதிகரிப்பு

டெல்லி: மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களின் தயாரிப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது, அதன் தரம் கண்டிப்பான முறையில் பரிசோதிக்கப்பட்டுவருகிறது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள்
மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள்

By

Published : May 25, 2020, 5:06 PM IST

கரோனா வைரஸ் நோயால் இந்தியாவில் இதுவரை 1,38,845 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவல் காரணமாக 4,021 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தனிமனித மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள், N-95 முகக்கவசம் ஆகியவற்றின் தயாரிப்பு 3 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் தரத்தை கண்டிப்பான முறையில் பரிசோதித்துவருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு உபகரணங்கள் குறைந்த தரத்தில் தயாரிக்கப்படுவதாகதக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சுகாதாரத்துறை அமைச்சகம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது. இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "தனிமனித பாதுகாப்பு உபகரணங்கள் குறைந்த தரத்தில் தயாரிக்கப்படுவதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.

செய்திகளில் வெளியான உபகரணங்களை மத்திய அரசு வாங்கவில்லை. எச்.எல்.எல். லைப் கேர் என்ற நிறுவனத்திடமிருந்தே சுகாதாரத்துறை அமைச்சகம் பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்கிறது. பரிசோதனை செய்து ஜவுளித்துறை அமைச்சகம் நியமனம் செய்த ஆய்வகம் அங்கீகாரம் வழங்கிய பிறகே பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. உபகரணங்கள் குறைந்த தரத்தில் தயாரிக்கப்பட்டது தெரியவந்தால், அந்நிறுவனத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நிமோனியாவால் உயிரிழந்த மூதாட்டிக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details