தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு விமான சேவையைத் தொடங்கிய பஞ்சாப்! - கரோனா அப்டேட்ஸ்

மொகாலி: பஞ்சாப் மாநிலத்திற்குப் பயணிப்பவர்களுக்கு சண்டிகர் விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்படும் என மொகாலி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனை

By

Published : May 25, 2020, 11:42 AM IST

விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை இன்றுமுதல் தொடங்கப்படும் என அறிவித்தார். அதையடுத்து பிற மாநில விமான பயணிகளை தங்களது மாநிலத்துக்குள் அனுமதிப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான பயணிகளுக்கு கட்டுப்பாடுகள், விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பஞ்சாப் மாநில அரசும் உள்நாட்டு விமான சேவையை இயக்குவதில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, பஞ்சாபிற்கு செல்லும் அனைத்துப் பயணிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படும். அறிகுறிகள் ஏதும் இல்லாதவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். பஞ்சாப் மாநிலத்தை அடைந்ததும் பயணிகள் 14 நாள்கள் அரசின் தனிமை முகாமில் தங்க வேண்டும்.

யூனியன் பிரதேசம் சண்டிகர், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய பகுதிகள் வழியாக செல்லுவோரும் அந்தந்த மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.

விதிமுறைகள்

  • மாநிலத்தின் குறிப்பிட்ட இணையத்தில் பயணத்திற்கான பதிவுசெய்து, பயணத்திற்கு முன்பே அந்தந்த மாநிலங்களுக்கான இ-பாஸ் பெற வேண்டும்.
  • விமான நிலையத்தில் பயணிகள் வெப்ப பரிசோதனைக்கு உள்படுத்தப்படுவார்கள்.
  • எந்த அறிகுறிகளும் இல்லாமல் காணப்படும் பயணிகள்கூட ஏற்கனவே 14 நாள்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டிருக்க வேண்டும்

எனப் பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:'பண உதவி, பயணத்திற்கு வாகனம்': ராகுல்காந்தி சந்தித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் ஒரு உரையாடல்

ABOUT THE AUTHOR

...view details