டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 4ஆம் தேதி திறந்த வாகனத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் திடீரென பரப்புரை வாகனத்தில் ஏறி முதலமைச்சரை முகத்தில் அறைந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆம் அத்மி கட்சி தொண்டர்கள் அவரை தாக்கி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இவர் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது.
அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கியதற்கு வருத்தம் தெரிவித்த இளைஞர்!
டெல்லி: முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கிய இளைஞர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரை அறைந்த சுரேஷ்
பின்னர் இதுகுறித்து பேட்டி அளித்த அவர், "நான் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவன் கிடையாது. ஆனால் காவல் துறையினர் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவன் என்றும், யார் தூண்டுதலால் முதலமைச்சரை தாக்கினாய் என விசாரணை நடத்தினர். ஆனால் யார் தூண்டுதலாலும் இதை செய்யவில்லை. முதலமைச்சர் கெஜ்ரிவால் மீது இருந்த வெறுப்பின் காரணமாக தான் இதை செய்தேன். அதற்கு தற்போது வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்", என தெரிவித்தார்.
Last Updated : May 10, 2019, 10:10 AM IST