தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெண்ணுடன் உறவில் இருந்தவரை சிறுநீர் குடிக்கவைத்த கும்பல் கைது! - ராஜஸ்தானில் பெண்ணுடன் தொடர்பு

ஜெய்ப்பூர்: பெண்ணுடன் உறவில் இருந்தவரை வலுக்கட்டாயமாகச் சிறுநீர் குடிக்கவைத்த ஆறு பேர் கைதுசெய்யப்பட்டு அவர்களிடம் விசாரிக்கப்பட்டுவருகிறது.

forced to drink
forced to drink

By

Published : Jun 17, 2020, 7:16 AM IST

ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி என்ற பகுதியில் பெண்ணுடன் உறவில் இருந்தவரை ஒரு கும்பல் கடத்திச் சென்றது.

பின்னர், அந்நபரை வலுக்கட்டாயமாகச் சிறுநீர் குடிக்கவைத்து துன்புறுத்தியது. தகவலறிந்த காவல் துறையினர் அவர்களைக் கைதுசெய்து விசாரித்துவருகிறது.

இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், "இந்தச் சம்பவம் ஜூன் 11ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இதில் தொடர்புடைய ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர். பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் சிரோஹி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மனிதன் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்தல்: சாதிய வன்மம் தலைக்கேறிய இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details