தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா தனிமை: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை! - Man commits suicide

லக்னோ: வெளி மாநிலத்திற்கு பயணித்த காரணத்தினால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

sd
dsd

By

Published : Apr 11, 2020, 6:59 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர் நகரில் உள்ள கிந்த்ரியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆஷு(21). இவர் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நேரத்தில் வெளிமாநிலத்திற்கு சென்று வந்த காரணத்தினால், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இவரை தினந்தோறும் மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று இவர் தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:முழு அடைப்பின்போது நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருப்பது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details