தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காரைக்காலில் கரோனா ஊடுருவல் - ஒருவர் பாதிப்பு - corona virus

புதுச்சேரி: காரைக்கால் மாவட்டத்தில் இதுநாள் வரை கரோனா வைரஸ் தொற்றால் ஒருவர்கூட பாதிக்கப்படாத நிலையில் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

karikal
karikal

By

Published : May 11, 2020, 9:41 AM IST

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா, "காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறை அடுத்த சுரக்குடி கிராமத்தைச் சேர்ந்த இருவர் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்ற காவலில் வருபவர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து 37 வயதான அவரின் தொடர்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மத்திய அரசு விதிமுறைகளின்படி அவர் வசித்த பகுதி முழுவதும் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

karikal

மக்கள் யாரும் வெளியில் வராமல் வீடுகளில் இருக்க வேண்டும். மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொள்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்துள்ளது. மேலும், தொற்று உறுதியானவரின் தொடர்புகளை ஆய்வு செய்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க : அறிகுறியின்றி டெல்லியில் பரவும் கரோனா - கெஜ்ரிவால்

ABOUT THE AUTHOR

...view details