குஜராத்தில் உள்ள அகமதாபாத் ரயில் நிலையத்திலிருந்து ஆஷ்ராம் விரைவு ரயில் டெல்லிக்குப் புறப்பட்டது. அப்போது ரயிலில் ஏற வேகமாக ஒடி வந்த இளைஞர் திடீரென்று மெதுவாக நடந்து வேகமாகச் சென்று கொண்டிருந்த ரயிலில் ஏறினார்.இந்நிலையில் எதிர்பாரா வகையில் இளைஞர் தவறி விழுந்து கால் பகுதி ரயிலிலும், உடல்பகுதி நடைமேடையிலும் சிக்கிக் கொண்டது. இப்படியே சிறிது தூரம் ரயில் அவரை இழுத்துக் கொண்டு சென்றது.
ஓடும் ரயிலில் அசால்டாக ஏறும் பயணி... நொடியில் நடந்த வீபரிதம்! - man slipped from train
அகமதாபாத்: ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ரயிலில் ஏறும் போது தவறி விழுந்த இளைஞரின் சிசிடிவி காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நொடியில் நடந்த வீபரிதம்
இதனைப் பார்த்த ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக ஒடி வந்து வாலிபரைக் காப்பாற்றி ரயிலில் எற்றினர். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சியைப் பகிர்ந்த ரயில்வே அமைச்சகம்," ஓடும் ரயிலில் ஏறவோ, இறங்கவோ வேண்டாமென்று அறிவுறுத்தியுள்ளது.