உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவில் 17 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அப்போது, அண்டை வீட்டில் 26 வயது இளைஞர் ஒருவர் தனது நண்பருடன் வசித்து வந்தார். இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் பணிக்குச் சென்றபோது, அந்த இளைஞர் சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
அதை அவரது நண்பர் செல்போனில் காணொலியாக பதிவு செய்துள்ளார். அந்தக் காணொலியை காட்டி சிறுமியை மிரட்டி கடந்த ஒரு வருடமாக சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். இதனிடையே, தற்போது கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சிறுமி தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்.