தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருமணத்திற்கு மறுப்பு: காதலியின் பெற்றோரை கொலைசெய்த இளைஞன்! - சுல்தான்பூர் இரட்டைக் கொலை

நொய்டா: திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலியின் பெற்றோரைக் கொலைசெய்துவிட்டு அவருடன் தப்பியோடிய காதலனைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

double murder case in UP  murder in UP  Sultanpur murder news  marriage proposal  lovers  உ.பி-யில் காதல் திருமணம் மறுப்பு  காதல் திருமணம்  காதல் திருமணம் மறுப்பு பெற்றோர் கொலை  உத்தர்ப் பிரதேசம் கொலை வழக்குகள்  சுல்தான்பூர் இரட்டைக் கொலை  Love Marraige Muders
Love Marraige Muders

By

Published : May 27, 2020, 9:49 AM IST

உத்தரப் பிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் மாவட்டம் அருகேயுள்ள சலர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிஷ். ஜெய்சிங்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கங்கனா ஸ்ரீ (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதலித்துவந்தனர்.

இந்நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பினர். இதையடுத்து, தங்களது திருமணம் குறித்துப் பேச ஆதிஷ், கங்கனாஸ்ரீயின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது, கங்கனாஸ்ரீயின் பெற்றோர் இந்தக் காதல் திருமணத்திற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆதிஷ் அவர்களைக் கொலைசெய்து விட்டு கங்கனாஸ்ரீயை தன்னுடன் அழைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் கங்கனாஸ்ரீயின் பெற்றோரது உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய காதல் இணையரை தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:பாம்பை வைத்து மனைவியைக் கொன்றவரிடம் தீவிர விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details