தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காதலியை நிர்வாணமாக வீடியோ எடுத்த காதலன்... அடுத்தடுத்து புதிய நபர்களின் மிரட்டலால் அதிர்ச்சி!

அமராவதி: மயக்க மருந்து கொடுத்து காதலியை நிர்வாணமாக காணொலி எடுத்த காதலன், தனது நண்பருக்கு காணொலிக்காட்சியை அனுப்பி, மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

rape
rape

By

Published : Jun 28, 2020, 10:27 PM IST

ஆந்திர மாநிலத்தில், குண்டூர் மாவட்டத்தில் கல்லூரி பயிலும் மாணவி ஒருவர், சக மாணவனுடன் நட்புறவு வைத்துள்ளார். நாளடைவில் நட்பானது காதலாக மாற, இருவரும் அவ்வப்போது தனிமையில் நெருக்கமாக இருந்துள்ளனர்.

அந்த வகையில், ஒரு நாள் காதலனை சந்திக்க மாணவி, தனியாக சென்றுள்ளார். அப்போது, காதலன் மயக்க மருந்து கலந்த பானத்தை மாணவிக்குக் கொடுத்துள்ளார். மயக்க மடைந்த மாணவியுடன் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டது மட்டுமின்றி, நிர்வாணமாக தனது செல்போனில் படம் மற்றும் காணொலி எடுத்து வைத்துள்ளான்‌.

சிறிது நாள்களுக்குப் பிறகு இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த காதலன், தான் படம்பிடித்த நிர்வாண காணொலியை, தனது நண்பனுக்கு அனுப்பியுள்ளான்‌.

இதையடுத்து, அந்த நண்பனும் காணொலியைக் காட்டி, மாணவியை தனது ஆசைக்கு இணங்க வைக்க முயற்சித்துள்ளார். மாணவி சம்மதம் தெரிவிக்காததால், ஆபாச தளத்தில் காணொலியை ஏற்றிவிடுவதாக மிரட்டியுள்ளார். சுமார் மூன்று ஆண்டுகளாக மாணவி இச்சம்பவத்தால் துன்புறுத்தப்பட்டு வந்த நிலையில், திடீரென்று ஒரு நாள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அதே காணொலியை அனுப்பி பணத்தைக் கேட்டு மிரட்டியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி, தனது பெற்றோரிடம் முழு விவரத்தையும் தெரிவித்துள்ளார்.

பெற்றோர் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சம்பந்தப்பட்ட இரண்டு மாணவர்களையும் கைது செய்தனர். மேலும், குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய மூன்றாவது நபரைத் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details