டெல்லி முகுந்த்பூர் அருகே ஃபாஜி காலனியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (25). போக்குவரத்து ஊழியரான இவர், முகுந்த்பூரில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலையில் வழக்கம்போல அவரது மனைவி, வீட்டு நாயுடன் வழக்கம்போல் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய் ஒன்று ராஜ்குமார் மனைவி அழைத்துச் சென்ற வீட்டு நாயை தாக்க வந்தது. இதனை தடுக்க முயன்றபோது தெரு நாய், ராஜ்குமாரின் மனைவியை கடித்துள்ளது.
மனைவிக்காக தெருநாயை அடித்துக்கொன்ற கணவன்; வீடியோ வைரல்! - fauzi colony rajkumar
டெல்லி முகுந்த்பூர் அருகே தனது மனைவியை கடித்ததால் தெரு நாயை கம்பால் அடித்துக்கொன்ற கணவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
படுகாயமடைந்த ராஜ்குமாரின் மனைவியை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர், இதுகுறித்து ராஜ்குமாரிடம் தெரிவித்துள்ளார். கோபமடைந்த ராஜ்குமார், அந்த தெருநாயை கம்பால் கொடூரமாக தாக்கினார். அருகில் இருந்தவர்கள் தடுத்தும் அவர்களது பேச்சை கேட்காமல் ராஜ்குமார் மீண்டும் ஆக்ரோசமாக தெருநாயை தாக்கியுள்ளார். சிறிது நேரத்தில் நாய், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தது.
வாயில்லா ஜீவன் என்றும் பாராமல் ராஜ்குமார் நாயை அடித்துக் கொல்வதை அருகில் இருந்த நபர்கள் வீடியோ எடுத்து பல்ஸ்வா டைரி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர், தெரு நாயை அடித்துக்கொன்ற ராஜ்குமாரை விலங்குகள் வதைத் தடுப்புச்சட்டம் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராஜ்குமார் தெரு நாயை அடித்துக்கொல்லும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.