இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. நாடு முழுவதும் தற்போதுவரை 1,238 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 35 பேர் உயிரிழந்தனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது நாடு சந்தித்துவரும் பெரும் நெருக்கடி நிலைக்கு உதவ பொதுமக்களும் நிறுவனங்களும் தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்கலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். அதற்கான வங்கி கணக்குகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, பிரதமரின் நிவாரண நிதிக்காக 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இது குறித்து பேசிய அவர், " சட்டப்பேரவை உறுப்பினராகவோ முதலமைச்சராகவோ நான் எவ்வித சம்பளத்தையும் பெறுவதில்லை.
நிவாரண நிதி தொர்பான தகவல்கள் அதேபோல, ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அதற்கு ஓய்வூதியமாக எதையும் நான் பெறுவதில்லை. எனவே, தற்போது என்னால் முடிந்த தொகையாக பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சமும் மாநில நிவாரண நிதிக்கு 5 லட்சமும் வழங்குகிறேன்" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா - ஸ்பைஸ்ஜெட் பணியார்களுக்கு சம்பளம் கட்!