கொல்கத்தா (மேற்கு வங்கம்): நாடு முழுவதும் இன்று அரசியலமைப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டுகிறது. இந்நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கரை புகழ்ந்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், " அரசியலமைப்பு தினமான இன்று ஜனநாயக இந்தியாவை கட்டமைத்த டாக்டர் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துகிறேன். நாட்டின் இறையாண்மை, ஜனநாயகம், சமூகத்துவம், மதச்சார்பின்மை, நீதி, குடியரசு, சுதந்திரம், சகோதரத்துவம் மற்றும் சமத்துவம் மூலம் இந்திய அரசியல் சாசனத்தை உயிர்ப்புடன் வைத்திருப்போம்" என குறிப்பிட்டுள்ளார்.