மேற்குவங்க மாநிலம், பர்கானாஸ் மாவட்டம், அசோக்நகரில் நடைபெற்றத் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் அம்மாநில முதலமைச்சரும், திருணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது, கட்டால் தொகுதி பாஜக வேட்பாளர் பாரதி கோஷின் காரில் இருந்து ரூ.1.13லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இசட் பிளஸ் பாதுகாப்புடன் பாஜக காரில் பணத்தை கடத்துகிறது- மம்தா
கொல்கத்தா: இசட் பிளஸ் பாதுகாப்புடன் பாஜக பணப்பெட்டிகளை எடுத்து செல்வதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி
அதுமட்டுமல்லாமல் இசட் பிளஸ், ஒய்பிளஸ் பிஜேபி பிளஸ் பாதுகாப்பு வைத்திருக்கும் பாஜக தலைவர்கள் பலர் தங்களின் பாதுகாப்பை பயன்படுத்தி காவல்துறையினர் வாகனத்திலேயே கட்டுகட்டாக பணம் அடுக்கப்பட்டுள்ள பெட்டிகளை கொண்டு செல்கின்றனர் என குற்றம் சாட்டினார். இதைதொடர்ந்து மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறுகையில், காரில் பணம் சிக்கிய விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.