ஒடிசாவில் கைர்புட் மாவட்டத்தில் உள்ள நகுடா கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளான். இதனையடுத்து, சிறுவனின் பெற்றோர்கள் அருகிலுள்ள மால்கங்கிரி மாவட்ட மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸை அழைத்தனர். அதன்படி, மருத்துவர் ஷக்தி பிரசாத்தும், ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் அக்கிராமத்துக்கு ஆம்புலன்ஸில் சென்றனர்.
ஆனால், கிராமத்திற்கு செல்ல சரியான சாலை வசதி இல்லாதது குறித்து அறியாத ஆம்புலன்ஸ் ஓட்டுநர், ஒரு கட்டத்திற்கு மேல் அங்கு செல்ல சாலைகள் இல்லாத காரணத்தால் இடையிலேயே ஆம்புலன்ஸை நிறுத்தியுள்ளார். இதனையடுத்து, அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு திரும்பிச் செல்லாமல், சிறுவன் உள்ள கிராமத்துக்கு 5 கிமீ நடந்தே சென்றனர்.