புதுச்சேரி மாநிலம் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள், கட்டிடங்கள் கட்டுவதற்கு தமிழ்நாட்டில் இருந்து மணல் கொண்டு வரப்பட்டன. சமீபகாலமாக தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் வீடுகள் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டுவது கேள்விக்குறியானது. இதனையடுத்து, இந்தத் தட்டுப்பாட்டைப் போக்க மலேசியாவிலிருந்து முதற்கட்டமாக 54 ஆயிரம் மெட்ரிக் டன் மணல் கப்பல் மூலம் காரைக்காலுக்கு கொண்டு வரப்பட்டது.
மலேசியாவில் இருந்து 54 ஆயிரம் மெட்ரிக் டன் மணல் இறக்குமதி! - மலேசியா மணல்
புதுச்சேரி: காரைக்காலில் மணல் தட்டுப்பாட்டை போக்க மலேசியாவில் இருந்து, கட்டுமான பணிக்காக 54 ஆயிரம் மெட்ரிக் டன் மணல் கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனம் மூலம் கொண்டுவரப்பட்ட மணலில் தரத்தை ஆய்வு செய்த காரைக்கால் துணை ஆட்சியர் உள்ளிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று காரைக்கால் கப்பல் துறைமுகத்திற்கு வந்த மணலை பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கும் பணியை தொடங்கி வைத்தனர்.
இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய காரைக்கால் துணை ஆட்சியர் ஆதரஸ், இறக்குமதி செய்யப்பட்ட 54 ஆயிரம் மெட்ரிக் டன் மலேசியா மணல் ஆய்வு செய்யப்பட்டு மணல் விற்பனை தொடங்கியுள்ளது. வெளிநாட்டில் இருந்து காரைக்காலுக்கு மணல் இறக்குமதி செய்யப்படுவது இதுவே முதல் முறை. இதன்மூலம் மணல் தட்டுப்பாடு குறையும் என்றும், பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.