அக்டோபர் 2ஆம் தேதி அண்ணல் காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. அதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. இதில் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மாநில பாஜக உறுப்பினர்கள் ஆகியோர் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் கலந்துகொண்டனர்.
காந்தியின் 150ஆவது பிறந்ததினம்: அமித் ஷா தலைமையில் ஆலோசனை! - காந்தி 150
டெல்லி: அண்ணல் காந்தியின் 150ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
Mahatma Gandhi
கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், அண்ணல் காந்தியின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் 'பாதயாத்திரை' நடத்துமாறு பாஜக தலைமை தனது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியது.
பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர தினத்தன்று உரையாற்றியபோது, அக்டோபர் 2ஆம் தேதி கொண்டாடப்படும் ஆண்டு விழாவில் மீண்டும் பிரயோகிக்க முடியாத பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்குமாறு குடிமக்களை வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.