தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தொடர்ச்சியாக டிவி பார்த்த மகன்... தாய் திட்டியதால் விபரீத முடிவு! - டிவி அனைத்ததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

மும்பை: தொடர்ச்சியாக டிவி பார்த்த மகனை தாய் கண்டித்து டிவியை ஆஃப் செய்த காரணத்தினால் மனமுடைந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

tv
tv

By

Published : Jun 10, 2020, 7:21 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பிப்வேவாடி பகுதியைச் சேர்ந்த 14 வயதான சிறுவன் ஒருவன், வீட்டில் காலையிலிருந்தே டிவி பார்த்துக் கொண்டே இருந்துள்ளான்.

இதனால், கடுப்பான சிறுவனின் தாயார், அவனை கண்டித்துவிட்டு டிவியை அனைத்துவிட்டு சென்றுள்ளார். தாயார் டிவியை ஆஃப் செய்ததால், மனமுடைந்த சிறுவன் நேராக மாடியில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளான்.

அப்போது, அறைக்கு சென்ற சிறுவனின் தங்கை இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளார். இந்தச் சத்தம் கேட்டு ஓடி வந்த தாயார், மகனை உடனடியாக அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

ஆனால், சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details