மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள தனோரா பகுதியில் இன்று நக்சலைட்டுகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் நான்கு வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டு, காவல் நிலையத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
முன்னதாக அப்பகுதியில் உள்ள சுர்ஜன்கா என்ற நக்சலைட், காவல் துறையினரால் கொல்லப்பட்டார். அவர் மீது 34 கொலை வழக்குகள் உட்பட 155 வழக்குகள் உள்ளன. மேலும், கடந்த ஞாயிறன்று நடத்திய நக்சல் தாக்குதலில் இரண்டு காவல் துறையினர் கொல்லப்பட்டு, மூவர் படுகாயமடைந்தனர்.
சுர்ஜன்கா கொலை செய்யப்பட்டதற்கு அங்கு பந்த் அறிவித்த நக்சல்கள், அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி, நான்கு வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். இரவு நேரத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த நபர்கள் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலையடுத்து, அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிறப்பு காவல் பிரிவினர் பதுங்கியுள்ள நக்சல்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:கரையைக் கடக்கும் ஆம்பன் புயல்: துரித தகவல்கள் உடனுக்குடன்...