இவர் இவ்வாறு பதிவிட்டதற்கு வலுவான ஒரு காரணமும் உள்ளது. மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் ரித்தேஷ். இவர் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். விலாஸ்ராவ் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவி வகித்தபோதுதான், மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது. நாட்டை உலுக்கிய இந்தத் தாக்குதலை மையமாக வைத்து, பிரபல தெலுங்கு பட இயக்குநர் ராம்கோபால் வர்மா படமாக்கினார்.
அப்படத்துக்கு விலாஸ்ராவ் தேஷ்முக் உதவினார் என்றும் தனது மகனுக்கு வாய்ப்பு கேட்டார் எனவும் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாரதிய ஜனதாவினர் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதனை விலாஸ்ராவ் திட்டவட்டமாக மறுத்தார்.
மேலும் மும்பைத் தாக்குதல் சம்பவத்தால் தனது பதவியையும் இழந்தார். தற்போது அவர் உயிருடன் இல்லை. இந்த நிலையில் அவரது மகன்கள் மூன்று பேரும் தற்போது காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர்.