மகாராஷ்டிரா மாநிலம் வானி பகுதியில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் நாட்டுக்குள் ஊடுறுவினார்கள். நமது வீரா்களின் தலை துண்டிக்கப்பட்டது. இந்திய எல்லையில் ஊடுறுவல் என்பது சர்வசாதாரணமாக நடந்தது.
காங்கிரஸ் என்ன செய்தது? ஆனால் பாரதிய ஜனதா அரசு உரி, பாலகோட் தாக்குதலுக்கு துல்லிய தாக்குதல், வான்வெளித் தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்தது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அவர்களின் பாணியிலியே பதிலடி கொடுக்கப்பட்டது இதுதான் முதல்முறை. அதனை பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கம் செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மக்களின் துயரத்துக்கு சட்டப்பிரிவு 370 தான் காரணம். இது தெரிந்தும் முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் அதனை நீக்கவில்லை.
ஜம்மு-காஷ்மீரில் நிலவி வந்த பயங்கரவாதத்துக்கு இதுவரை 40 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். எனினும் அதற்கு காரணமாக சிறப்பு அந்தஸ்தை நீக்க வேண்டும் என காங்கிரஸ் நினைத்ததில்லை. வாக்கு வங்கி அரசியலை கவனத்தில் கொண்டு இவ்வாறு நடந்துக் கொண்டது.