தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்தை தொட்ட கரோனா எண்ணிக்கை! - Coronavirus Maharashtra

மும்பை: மகாராஷ்டிராவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.

Maharashtra crosses 1 Lakh covid-19 cases today
Maharashtra crosses 1 Lakh covid-19 cases today

By

Published : Jun 12, 2020, 9:26 PM IST

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை நெருங்கி உள்ளது. அதிலும் குறிப்பாக நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு மகாராஷ்டிராவில் தான் கண்டறியப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், இன்று (ஜூன் 12) புதிதாக 3, 493 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால், அம்மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,01,141ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் இத்தொற்றால் இன்று 127 பேர் உயிரிழந்தனர்.

இதன்மூலம், அம்மாநிலத்தில் கரோனாவால் இதுவரை 3,717 பேர் உயிரிழந்தனர். மேலும் 47,793 பேர் இத்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details