புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு உறுப்பினர்களுடன் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று மகாராஷ்டிரா மேலவை உறுப்பினராகப் பதவியேற்கிறார். மகா விகாஸ் அகாதி கூட்டணி மூலம் கடந்த நவம்பர் 28ஆம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்ற சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, இனி தனது பதவியில் ஆறுமாத காலம் சிக்கலின்றி நீடிக்கலாம்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைத்த நிலையில், முதலமைச்சர் பதவி தொடர்பாக கூட்டணியில் முறிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சிவசேனாவின் அரசியல் எதிரிகளாகக் கருதப்பட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் அக்கட்சி இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது.