மகாராஷ்டிரா மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் அனில் பாரப் கூறுகையில், “மாநிலத்துக்குள் ஆங்காங்கே சிக்கி தவிப்பவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதை உறுதி செய்யும் வகையில், நிபந்தனையின் பேரில் மாநில அரசு கட்டணமில்லாத பேருந்து சேவையை மே11 (திங்கள்கிழமை) முதல் தொடங்குகிறது.
இந்தச் சேவையை தொழிலாளர்கள், யாத்ரீகர்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இருப்பினும் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் இருக்கும் மக்கள் சேவையை பெற தகுதியற்றவர்கள் ஆகிறார்கள்.
முதலாவதாக, மாநிலத்துக்குள் பிற பகுதிகளுக்குள் சிக்கி தவிப்பவர்கள் சொந்த ஊர் செல்ல விரும்பினால், அவர்கள் தங்கள் பயணம் தொடர்பான விவரங்களை காவல் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.