தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உல்ஹாஸ் நகரில் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு; 11 பேர் படுகாயம் - cylinder explosion

மும்பை: திடீரென சிலிண்டர் வெடித்ததில் தனியார் உணவகத்தின் உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சிலிண்டர்
சிலிண்டர்

By

Published : Aug 8, 2020, 6:50 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தின் உல்ஹாஸ் நகரில் அமைந்துள்ள உணவகத்தில் திடீரென சிலிண்டர் வெடித்தது. இந்தச் சிலிண்டர் வெடிப்பில் உணவகத்தின் உரிமையாளர் பப்பு குப்தா (35) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இது குறித்து காவல் துறை தரப்பில் கூறுகையில், “இந்த விபத்தில் காயமடைந்தவர்களைச் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். படுகாயமடைந்த 11 பேரில் மூன்று பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தீயணைப்புத் துறையினர், பேரிடர் மீட்புக் குழுவினர் தீயை அணைக்க முயன்றுவருகின்றனர்” என்றார்.

இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:சிலிண்டரை சரியாக அணைக்காததால் தீ விபத்து!

ABOUT THE AUTHOR

...view details