மகாரஷ்டிரா மாநிலம், ஹுட்கேஷ்வர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (55). இவருக்கு விக்ராந்த் (25) என்ற மகன் உள்ளார். இவர், ஜிம் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தார். தந்தை, மகன் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல், இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. அதில், ஆத்திரமடைந்த விக்ராந்த் ஹிந்தி பட வசனங்களை பேசி தந்தை விஜயின் கழுத்தை கடித்து அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.