மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கடந்த செவ்வாய்க்கிழமை காணொலி மாநாட்டின் மூலம் தனியார் நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு உரையாற்றினார். அதில், "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களைச் சரிசெய்ய மாநில அரசு கடுமையாகப் போராடிவருகிறது.
கரோனா வைரஸ் (தீநுண்மி) வீட்டில் இருப்பது பாதுகாப்பானது என எவ்வாறு கற்றுக்கொடுத்ததோ அது மாதிரி மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலீடு செய்வதும் பாதுகாப்பான ஒன்றே. இங்கு முதலீடு செய்யும் அனைவரது பணமும் பாதுகாப்பாக இருக்கும்" என உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.