மகாராஷ்டிர மாநிலத்தில் மரபணு மாற்றப்பட்ட விதைகளை பயிரிடுவதற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஷெட்கரி சங்காதனா (Shetkari Sanghatana) என்கிற விவசாய அமைப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளது.
மரபணு மாற்றப்பட்ட விவசாயம்தான் வேண்டும்...! விவசாயிகள் வித்தியாசமான போராட்டம் - போராட்டம்
அகோலா: மரபணு மாற்றப்பட்ட விதைகளை பயிரிடுவதற்கு மகாராஷ்டிர அரசு தடை விதித்திருப்பதற்கு எதிராக அம்மாநில விவசாயிகள் வித்தியாசமான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
agri
அதன்படி, அம்மாநிலத்தின் அகோலா என்னும் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரி விதைகளை பயிரிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அந்த விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அனில் கன்வாட் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் போராட்டத்தில் ஐந்தாயிரம் விவசாயிகள் பங்கேற்பார்கள் என்றும், தடை செய்யப்பட்ட விதைகளை பயிரிடுவதால் கைது செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.