கரோனா தொற்றால் மத்தியப் பிரதேச மாநில அமைச்சர் துளசி ராம் சிலாவத்தும், அவரது மனைவியும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “நானும், எனது மனைவியும் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருக்கிறோம். என்னுடன் தொடர்புகொண்ட அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ம.பி. அமைச்சர்! - மத்திய பிரதேச அமைச்சர் துளசி சிலாவத், அவரது மனைவிக்கும் கரோனா
போபால்: மத்தியப் பிரதேச மாநில நீர்வளத் துறை அமைச்சர் துளசி ராம் சிலாவத்துக்கும் அவரது மனைவிக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் துளசி சிலாவத்
தற்போது பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில், அமைச்சர் துளசி சிலாவத்தும் அவரது மனைவியும் விரைவாகக் குணமடைய பிரார்த்தனை செய்வதாகப் பதிவிட்டுள்ளார்.