மேற்கு வங்க பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கைலாஷ் விஜய்வர்கியாவின் மகனும், பாஜக சட்டப்பேரவை உறுப்பினருமான ஆகாஷ் விஜய்வர்கியா கடந்த ஜூன் 26ஆம் தேதி மாநகராட்சி அலுவலரை கிரிக்கெட் மட்டையால் தாக்கினார்.
வன்முறையில் ஈடுபட்ட பாஜக பிரமுகரை வரவேற்று சுவரொட்டிகள்! - கைலாஷ் விஜய்வர்கியா
போபால்: மாநகராட்சி அலுவலரைத் தாக்கிய பாஜக பிரமுகர் ஆகாஷ் விஜய்வர்கியாவை வரவேற்று மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
பாஜக பிரமுகரை வரவேற்று சுவரோட்டிகள்
பின்னர், ஆகாஷ் விஜய்வர்கியா காவல்துறையால் கைது செய்யப்பட்டு ஜூலை 7ஆம் தேதிவரை சிறையில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை வரவேற்கும் விதமாக இந்தூர் முழுவதும்சுவரோட்டிகள் ஒட்டப்பட்டது. அரசு அலுவலரைத் தாக்கியவரை வரவேற்று சுவரோட்டிகள் ஒட்டுவதா என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதையடுத்து, அவரை வரவேற்கும் சுவரோட்டிகள் மாநகராட்சி ஊழியர்களால் நீக்கப்பட்டது.