தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜேஇஇ, நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து - ம.பி., முதலமைச்சர் - மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஜேஇஇ, நீட் தேர்வெழுதும் மாணவர்கள் தேர்வுக்கூடம் செல்ல வசதியாக இலவச போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்படும் என அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் அறிவித்துள்ளார்.

Neet
Neet

By

Published : Aug 31, 2020, 10:41 AM IST

பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான ஜேஇஇ, நீட் தேர்வுகள் நாடு முழுவதும் அடுத்த மாதம் (செப்டம்பர்) நடைபெறவுள்ளன. மத்தியப் பிரதேசத்தில் இத்தேர்வெழுதும் மாணவர்கள் தேர்வுக்கூடம் செல்ல வசதியாக இலவச போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்படும் என அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் "ஜேஇஇ, நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவசமாக போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநில, மாவட்ட தலைமையகங்களிலிருந்து தேர்வு மையங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்படும். தேர்வெழுதும் மாணவர்கள் 181 என்ற எண்ணிற்கும் அல்லது http://mapit.gov.in/covid-19 என்ற இணையதளத்தை கிளிக் செய்தும் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்” என சிவராஜ் சிங் சௌகான் கூறியுள்ளார்.

மேலும், முதலமைச்சர் அலுவலக ட்விட்டரில், “கரோனா நோய் தொற்று பரவல் சூழலில், தேர்வெழுத வரும் மாணவர்கள் எவ்வித சிரமம் மேற்கொள்ளாமல் இருக்க, அவர்களுக்கு இரண்டு வழிகளில் இலவச போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியை எந்தவொரு மாணவரும் பெறமுடியும். இதற்கு 181 என்ற உதவி மையத்திடமும் அல்லது மாநில அரசிடம் இ-பாஸ் மூலமாகவும் மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

செப்டம்பர் 13ஆம் தேதி தேசிய தகுதி காண நுழைவுத் தேர்வு (நீட்) நடைபெறவுள்ளது. பொறியியலுக்கான நுழைவுத் தேர்வு, ஜேஇஇ,தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. கரேனா சூழலில், மாணவர்கள் தேர்வு எழுவதற்கு தேர்வு மையங்களுக்குச் செல்கையில், நோய் தொற்று பரவலால் அவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதென எதிர்க்கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details