மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத் கடந்த சில மாதங்களாகவே கை விரலில் ஏற்பட்ட வலியால் தவித்துவந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை ஒன்பது மணி அளவில் ஹமிதா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் உடல்நிலையை பரிசோதனை செய்துவிட்டு மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதலமைச்சர்
போபால்: மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Kamal Nath
இன்று மாலையே அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இது குறித்து மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், "நீங்கள் நல்ல உடல்நிலையுடன் வாழ நான் வேண்டிக் கொள்கிறேன். அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற உங்களின் செயல் பாராட்டுக்குரியது" என தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.