தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரள தங்கக் கடத்தல் வழக்கு; எம்.சிவசங்கர் கைது! - கேரள தங்கக் கடத்தல்

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் தனிச் செயலர் எம்.சிவசங்கர் இன்று கைது செய்யப்பட்டார்.

M. Sivashankar Kerala gold scam case Sivashankar arrested in Kerala எம்.சிவசங்கர் கைது கேரள தங்கக் கடத்தல் வழக்கு பினராயி விஜயன் எம்.சிவசங்கர் கேரள தங்கக் கடத்தல் தங்கக் கடத்தல்
M. Sivashankar Kerala gold scam case Sivashankar arrested in Kerala எம்.சிவசங்கர் கைது கேரள தங்கக் கடத்தல் வழக்கு பினராயி விஜயன் எம்.சிவசங்கர் கேரள தங்கக் கடத்தல் தங்கக் கடத்தல்

By

Published : Nov 24, 2020, 12:06 PM IST

திருவனந்தபுரம்: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் தனிச் செயலாளர் எம்.சிவசங்கர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சிவசங்கர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.

அவரை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் பிணை கோரி சிவசங்கர் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்க மறுத்துவிட்டது. இது தவிர இவர் மீது சிபிஐ அலுவலர்களும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஜூலை 5ஆம் தேதி, தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறையினர் மற்றும் சிபிஐ அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 14.82 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ தங்கம் கடத்தும் போது சுங்க அலுவலர்களிடம் சிக்கியது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க: பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலாளருக்கு சம்மன்

ABOUT THE AUTHOR

...view details